யுனஸ்கோ அங்கீகாரம் பெற தமிழக அரசு முயற்சிக்க வலியுறுத்தல்|The Albert Victor Bridge 139th Brithday
வைகை ஆற்றால் பிரிந்து கிடந்த மதுரை மாநகரின் வடகரை, தென்கரையை இணைக்கும் வகையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மதுரையில் கட்டப்பட்ட முதல் பாலமான ஏவி பாலம் என்று அழைக்கப்படும் ஆல்பர்ட் விக்டர் பாலத்துக்கு வயது இன்று 139. இதை மதுரை மக்கள் கேக் வெட்டி மகிழ்சியாக கொண்டாடி வருகின்றனர். ஆங்கிலேயரின் தொழில்நுட்ப அறிவும், தமிழர்களின் கட்டுமானகட்டுமானத் திறமையையும் பயன்படுத்தி தரமான பொருள்கள் சேர்த்து திடமானதாக 12 மீட்டர் அகலத்தில் 250 மீட்டர் நீளத்தில் இப்பாலம் கட்டப்பட்டது. 16 தூண்களில் ஆர்ச் வடிவில் வடிவமைக்கப்பட்ட இப்பாலம் இன்றும் கம்பீரமாக உறுதியோடு பயனளித்து வருகிறது. இதை கட்டிய பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் பெயரிலேயே ஏவி பாலம் என மதுரை மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆயுள் காலம் 100 ஆண்டுகள் தான் என்று சொல்லப்பட்ட நிலையில் 139 வயதிலும் உறுதித்தன்மையுடன் இயங்கி வருகிறது. இது உறுதியாக உள்ளதை வல்லுநர்கள் சோதனை செய்து உறுதி செய்துள்ளனர். மதுரை நகரை விரிவுபடுத்தும் நோக்கில் ஆங்கிலேய அதிகாரிகளால் 1886 டிசம்பர் 8 ம் தேதி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 1889 டிசம்பர் 9ம் தேதி இப்பாலம் திறக்கப்பட்டது. இந்தப் பாலம் அமைக்கப்பட்ட பின்புதான் மதுரை மாநகரமாக உருவானது.