என்ன செய்யப் போகிறார் அமைச்சர் நிர்மல்குமார்
என்ன செய்யப் போகிறார் அமைச்சர் நிர்மல்குமார் | Tamilnadu Political | Thiruparakundram | Madurai | TN Minister| Nirmal Kumar தென் மாவட்டத்தின் மையமாக உள்ள மதுரை மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதிகளில் 8 தொகுதிகளை தவெக கைப்பற்றியது. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் வெற்றி பெற்றார். கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக சபாநாயகராக இருந்த காளிமுத்துக்கு பின் திருப்பரங்குன்றம் தொகுதியில் தேர்வான நிர்மல்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. நிர்மல்குமாருக்கு கிடைத்த இந்த வாய்ப்பு திருப்பரங்குன்றம் மக்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. தவெக ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழிகாட்டுதல்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது. மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப்கார், கழிவுநீர் மேலாண்மை, குடிநீர் வசதி உள்ளிட்ட எண்ணற்ற பிரச்சனைகளை நிர்மல்குமார் தீர்த்து வைப்பார் என தொகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.