உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு | Thiruparankundram Deepam | CM Vijay Denies it | VHP Accusation

விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு | Thiruparankundram Deepam | CM Vijay Denies it | VHP Accusation

விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு | Thiruparankundram Deepam | CM Vijay Denies it | VHP Accusation திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சொந்தமான மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட தீபம் ஏற்ற தமிழக வெற்றிக் கழக அரசு முன்வரவில்லை. இச்செயல் ஹிந்துக்களுக்கு துரோகம் விளைவிப்பதாகவே பார்க்கப்படும், என மதுரையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் குற்றம் சுமத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதை முந்தைய திமுக அரசு நிறைவேற்றவில்லை. இதனால் திமுக அரசுக்கு கடந்த சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் தக்கப் பாடம் கற்பித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அதுபோல தற்போது தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ள தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கையில் எடுத்துள்ளது. தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது ஹிந்துக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். வரும் திருக்கார்த்திகை அன்று ஹிந்துக்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு உயர் நீதிமன்ற உத்தரவின்படி மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் ஹிந்துக்களுக்கு துரோகம் விளைவிக்கிறது தமிழக வெற்றிக்கழக அரசு என தமிழக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும். மதச்சார்பற்ற அரசு என கூறிக் கொள்ளும் தமிழக வெற்றிக்கழக ஆட்சியாளர்கள் முந்தைய திமுக ஆட்சியாளர்கள் போலவே ஹிந்து விரோதப் போக்கை தொடர்ந்தால் அதற்கான பலன்களை வரும் தேர்தல்களில் அனுபவிக்க வேண்டி இருக்கும். தமிழக அரசு இப்பிரச்சனையில் மேல்முறையீடு மனுவை திரும்ப பெறாவிட்டால் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் எச்சரிக்கை விடுத்தார்.

ஜூன் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை