குடிகாரனால் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் | Thiruvananthapuram | Train
ஓடும் ரயிலில் பெண்ணை கீழே தள்ளி விட்ட கொடூரன் பெண்கள் கோச்சில் ஏறி குடிகாரன் அட்டூழியம் கண்ணை மறைத்தது மது போதை ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய கொடூரன் பெண்ணை காலால் எட்டி உதைத்து சித்ரவதை டில்லி டு திருவனந்தபுரம் நோக்கி கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. ரயிலில் பெண்கள் கோச்சில் ஏறிய போதை ஆசாமி பெண் பயணிகளுடன் தகராறு செய்தார். பெண்கள் கொதித்தெழுந்தவுடன் போதை ஆசாமி பெட்டியின் வாயில் கதவு அருகே நின்று கொண்டான். அவன் வாயில் கதவருகே நின்றதால் பெண்கள் டாய்லெட் செல்ல அஞ்சினர். பெண் கோச்சில் பயணித்த 2 இளம் பெண்கள் டாய்லெட் சென்றனர். ஒரு பெண் டாய்லெட்டிற்குள் சென்ற நிலையில், மற்றொரு பெண் பாதுகாப்பாக வெளியே கதவு அருகே நின்று கொண்டார். போதை ஆசாமி திடீரென வாயிலருகே காவலுக்கு நின்ற பெண்ணை காலால் எட்டி உதைத்து ஓடும் ரயிலில் இருந்து துடிக்கத்துடிக்க கீழே தள்ளி விட்டான். அந்த பெண் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தார். டாய்லெட் சென்ற பெண் வெளியே வந்து பார்த்தபோது தன்னுடன் வந்த பெண்ணை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தநப் பெண், சந்தேகத்தின் பெயரில் சக பயணிகளிடம் விசாரித்தார். வாயிலில் நடந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை. எனினும் அவசர போலீஸ் எண்ணிக்கு அப்பெண் நடந்த சம்பவங்கள் குறித்து கூறினார். இதற்கிடையே தண்டவாளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த பெண்ணை அந்த வழியாக வந்த மெமு ரயிலின் லோக்கோ பைலட் பார்த்து, ரயிலை நிறுத்தி பெண்ணை மீட்டார். வர்க்கலை ரயில் நிலையத்தை அடைந்தவுடன் பயணிகள் உதவியோடு தனியார் ஹாஸ்பிடலில் அந்த பெண்ணை அட்மிட் செய்தனர். அந்த பெண் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து கேரளா எக்ஸ்பிரஸ் கொச்சுவேளி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அங்கு காத்திருந்த ரயில்வே போலீசார் பெண்கள் கோச்சில் ஏறிய போதை ஆசாமியை மடக்கிப் பிடித்து ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், காயமடைந்த பெண் உட்பட 2 இளம்பெண்களும் ஆலுவா ரயில் நிலையத்திலிருந்து ஏறி திருவனந்தபுரம் நோக்கி வந்ததும், போதை ஆசாமி கோட்டயம் ரயில் நிலையத்தில் ஏறி திருவனந்தபுரம் நோக்கி சென்றதும் தெரிய வந்தது. தமிழக கேரள எல்லையில் உள்ள பணச்சமுடு பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சுரேஷ்குமார் என்பவன் மது போதையில் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டது உறுதியானது. அவனை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ரயிலில் பெண் பயணியை எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதற்கு இந்த சம்பவம் ஒன்றே சாட்சி என பெண்கள் வேதனை தெரிவித்தனர்.