டிஜிபிஎஸ் நவீன கருவி மூலம் அளவிட்ட மத்திய தொல்லியல் துறை
டிஜிபிஎஸ் நவீன கருவி மூலம் அளவிட்ட மத்திய தொல்லியல் துறை | Madurai | Survey Work at Tirupparankundram Hill | Survey Using Advanced DGPS Equipment மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக்கோரி ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன், ஸ்ரீமதி முன்னிலையில் கடந்த மாதம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும். முழு ஆய்வு நடத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 21 ம் தேதி திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் பணி துவங்கியது. மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ், திருமங்கலம் ஆர்டிஓ சிவஜோதி, சர்வே அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு பணியை மேற்கொண்டனர். மலைக்குச் செல்லும் பழநியாண்டவர் கோயில் தெரு, கோட்டைத் தெரு, கோடாங்கி தோப்பு உள்ளிட்ட மலையை சுற்றி அளவிடும் பணியை தொடங்கினர். மலை முழுவதும் DGPS எனும் நவீன அளவீடு கருவி மூலம் அளவெடுத்தனர். இப்பணிகள் இன்றுடன் நிறைவுபெற்றது. அதன் அறிக்கையை ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்ய உள்ளனர்.