உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பூரண சந்திரன் உடலுக்கு பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் மலரஞ்சலி |Tribute to Poorana chandran

பூரண சந்திரன் உடலுக்கு பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் மலரஞ்சலி |Tribute to Poorana chandran

மதுரை, நரிமேடு மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பூர்ணசந்திரன் வயது 40. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், முதல்வர் ஸ்டாலினின் பாரபட்சமான நிலைபாட்டை கண்டித்தும், நேற்று மதுரை அவுட்போஸ்ட் அருகில் உள்ள ஈவெரா சிலை அருகே, உள்ள போலீஸ் பூத்திற்குள் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஹாஸ்பிடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு கூடிய பாஜக மற்றும் ஹிந்து அமைப்பினர் பூர்ண சந்திரன் ஆன்மா சாந்தியடைய வேண்டி சஷ்டி கவசம் பாடினர். பிரேத பரிசோதனை அறை முன்பு திரளானோர் பூரண சந்திரனுக்கு வீர வணக்கம் என்ற பதாகைகளை ஏந்தியவாறு மலரஞ்சலி செனாத்தி வருகின்றனர். அங்கு வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீநிவாசன், பூர்ண சந்திரன் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

டிச 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ