உதயநிதியை தொடர்ந்து உதயகுமார் சர்ச்சை பேச்சுக்கு போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு
உதயநிதியை தொடர்ந்து உதயகுமார் சர்ச்சை பேச்சுக்கு போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு | Madurai | Dont Speak Disrespectfully About Trisha | Warning to Former Minister தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய்யின் தோழியான நடிகை திரிஷாவை விமர்சனம் செய்து தொடர்ந்து கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் காவிரி நீர் தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி பேசிய சர்ச்சை கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தி, உதயநிதி கைது செய்யப்பட்டார். அடுத்தபடியாக தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் நடிகை திரிஷா தொடர்பாக பேசியது கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. அதற்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், இருவரின் நட்பை கொச்சை படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குறியது. யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு! முன்னாள் அமைச்சரே, மாண்பு தவற வேண்டாம் எங்கள் அன்பு அக்கா திரிஷாவைப்பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும். பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்ற வாசகங்களோடு மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றத்தினர் மதுரை மாநகர் முழுவதிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். திரிஷா நற்பணி மன்றம் தொடங்கியதில் இருந்து உதயநிதிக்கு எதிராகவும், உதயகுமாருக்கு எதிராகவும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.