உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வழக்குகள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதி | Tungsten issue | Minister Murthy | Melur

வழக்குகள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதி | Tungsten issue | Minister Murthy | Melur

வழக்குகள் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி உறுதி | Tungsten issue | Minister Murthy | Melur | Madurai மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் 48 கிரா மக்கள் சார்பில் பல கட்ட போராட்டங்கள் கடந்த இரண்டு மாதமாக நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக மேலுார் டு மதுரை தல்லாகுளம் தலைமை போஸ்ட் ஆபீஸ் வரை வாகன ஊர்வலம் நடந்தது. இதில் கலந்து கொண்ட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்குகளை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் அரசிடம் வலியுறுத்தினர். இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாபட்டியில் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை வணிகவரி அமைச்சர் மூர்த்தி சந்தித்து பேசினார். கலெக்டர் சங்கீதா உடனிருந்தார்.

ஜன 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !