உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / டங்ஸ்டன்ரத்து உத்தரவால்அண்ணாமலையை கடவுளாக பார்க்கும் மக்கள் |people who see Annamalai as God|Madurai

டங்ஸ்டன்ரத்து உத்தரவால்அண்ணாமலையை கடவுளாக பார்க்கும் மக்கள் |people who see Annamalai as God|Madurai

டங்ஸ்டன் ரத்து உத்தரவால் அண்ணாமலையை கடவுளாக பார்க்கும் மக்கள் | people who see Annamalai as God | Madurai மதுரை மேலுார் தாலுகாவிற்கு உட்பட்ட அரிட்டாபட்டி பல்லுயிர் பாதுகாப்பு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 5,000 ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்தது. விளை நிலங்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து 48 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து டங்ஸ்டன் திட்டம் வராது என பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து வாக்குறுதி அளித்தார். அதன் முயற்சியாக மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவான் மற்றும் கிராம மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழு டில்லி புறப்பட்டு சென்றது. அங்கு மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டியை டில்லியில் நேரில் சந்தித்து டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். அதை ஏற்று டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. கிராம மக்களிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய அண்ணாமலை, டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய உதவிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் பாஜக நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா மதுரை வெள்ளாலபட்டியில் நடைபெற்றது. இதில் மத்திய சுரங்க அமைச்சர் கிஷன் ரெட்டி, அண்ணாமலை, பேராசிரியர் ராம சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். டங்ஸ்டன் ரத்து செய்ததன் மூலம் 48 கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபட்ட அண்ணாமலையை திருவண்ணாமலை கடவுளை பார்ப்பது போல் உணர்வதாக கிராம மக்கள் பெருமிதத்துடன் கூறினர்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ