உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்க விமான டிக்கெட் ரெடி | Tuticorin | Republic Day Parade

குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்க விமான டிக்கெட் ரெடி | Tuticorin | Republic Day Parade

மத்திய பாதுகாப்பு மற்றும் கல்வி துறை அமைச்சகம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நாடு முழுவதும் 2 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கவிதை போட்டியில் தூத்துக்குடி பி.எம்.சி பள்ளி பிளஸ் 2 மாணவி டிவைனா சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லட்சுமி பாய் வீரம் மற்றும் தியாகம் குறித்து ஆங்கிலத்தில் கவிதை எழுதினார். இக்கவிதை சிறந்த கவிதையணாக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து டிவைனாவிற்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது. ஜனவரி 26 ம் தேதி டில்லி செங்கோட்டையில் நடக்கும் குடியரசு தின அணி வகுப்பை பார்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக டில்லிக்கு பெற்றோருடன் சென்று வர விமான டிக்கெட் மத்திய பாதுகாப்பு மற்றும் கல்வித்துறை அமைச்சகம் வழங்கியது. குடியரசு விழாவில் மாணவி டிவைனாவிற்கு விருது வழங்கி கவுரவப்படுத்தப்படுவார்.

ஜன 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை