தவெக மாநில மாநாடு குறித்து மக்கள் என்ன சொல்லுறாங்க? | TVK Conference | Public opinion | Madurai
தவெக மாநில மாநாடு குறித்து மக்கள் என்ன சொல்லுறாங்க? / TVK Conference / Public opinion / Madurai மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடந்து முடிந்துள்ளது. இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதுகுறித்து மாநாடு நடைபெற்ற பகுதியில் வசிக்கும் பாரபத்தி, வலையங்குளம், எலியார்பத்தி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்களின் பார்வை எப்படி இருந்தது என்பது குறித்து தினமலர் நியூஸ் சேனல் நிருபர் குழு களத்தில் இறங்கி ஆய்வு செய்தது. அதுபற்றி பார்க்கலாம். மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஒழுக்க சீலர்களாக மிடுக்காக இருந்தனர். ஆனால் தவெக மாநாடு ஸ்கூல் பசங்களை வைத்து நடத்தப்பட்டது போல் தோற்றம் கொண்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்க்கு அரசியல் பக்குவம் போதாது. பிரதமர் மோடி முதல் முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரையும் பற்றியும் எடுத்தெறிஞ்சு பேசி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார் என்றே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.