உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / திமுக, அதிமுக போல் தவெக வசூலில் அதிரடி, சரவெடி

திமுக, அதிமுக போல் தவெக வசூலில் அதிரடி, சரவெடி

திமுக, அதிமுக போல் தவெக வசூலில் அதிரடி, சரவெடி | Tasmac, Ration Shop, Street Stall | TVK Under Control | Tamilnadu | Politics மதுரையில் தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி போல் ரேஷன், மதுக்கடைகளை உள்ளூர் நிர்வாகிகள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் களையை த.வெ.க., நிர்வாகிகள் கற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் வட்ட, ஒன்றிய எல்லைக்குள் செயல்படும் ரேஷன், டாஸ்மாக், தெருவோர, இரவு நேர கடைகளில் இருந்து மாதம் அல்லது தினம் குறிப்பிட்ட தொகை ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு சென்று சேர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. குறிப்பாக ஒவ்வொரு ரேஷன் கடைகளில் இருந்தும் மாதம் 2 ஆயிரம் முதல் பல ஆயிரம் ரூபாய் நிர்வாகிகளுக்கு செல்கிறது. இது கட்சி வளர்ச்சிப் பணிக்காக நிர்வாகிகள் செலவிடுகின்றனர் என்ற கோணத்தில் அதிகாரிகளும் கண்டுகொள்ளவதில்லை. ஆளுங்கட்சியும் கட்டுப்படுத்துவதில்லை. இதனால் இப்பணிகள் மாமூலாக தொடர்ந்தன. மதுரை வடக்கு, மத்தி, தெற்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், மாவட்டத்தில் கிழக்கு, உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிகளை த.வெ.க.,கைப்பற்றியது. இன்னும் அமைச்சரவையே முழுமையாக அமையாத நிலையில், பெத்தானியாபுரம் உள்ளிட்ட பல்வேறு வார்டு, மாவட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை லோக்கல் த.வெ.க., நிர்வாகிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதுகுறித்து தி.மு.க., அ.தி.மு.க.,வினர் கூறியதாவது: கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய சிலர் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் வசூல் செய்வது வழக்கம். சில பகுதிகளில் மாதம் 10ம் தேதிக்கு பின் இத்தொகை நிர்வாகிகளுக்கு கைமாறும். ஆனால் இம்மாதம் மே 4ல் ஒட்டு எண்ணிக்கையில் த.வெ.க., முன்னிலை பெற்று பின் ஆட்சியும் அமைத்தது. இதனால் இம்மாதம் யாருக்கும் தொகை கைமாறவில்லை. இதையறிந்த தற்போதைய ஆளுங்கட்சி நிர்வாகிகள் சிலர் ரேஷன்கடைகளை அணுகி கைமாறு குறித்து பேசியுள்ளனர். இதன் மூலம் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்ற நிலையே நீடிக்கிறது என்றனர்.

மே 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !