உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் உறுதி | Dinamalar Founder T.V.Ramasubbaiyer

மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் உறுதி | Dinamalar Founder T.V.Ramasubbaiyer

மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் உறுதி | Dinamalar Founder T.V.Ramasubbaiyer | Bronze Statue | TVK MLA Karthikeyan | Madurai தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் 42வது நினைவு நாள் நிகழ்வு, பாரதி யுவகேந்திரா சார்பில் மதுரை கூடல் நகர், ஆனையூர் மெயின் ரோட்டில் உள்ள காஞ்சி பெரியவர் கோயிலில் நடைபெற்றது. வழக்கறிஞர் புதூர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், சமூக அக்கறை கொண்ட நாளிதழ் தினமலர், என புகழாரம் சூட்டினார். தினமலர் நாளிதழை படித்து விட்டு அரசியல் வாதிகள் அன்றாடப் பணிகளை மேற்கொண்டால் மக்கள் பணியை சிறப்பாக செய்ய இயலும், என ஓய்வு போலீஸ் எஸ்பி மணிவண்ணன் பேசினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு பேசுகையில், தமிழக அரசு லஞ்சம் கூடாது என சொல்கிறது. லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்; என பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது தினமலர், என பெருமையாகக், கூறினார். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்கப் பத்திரிகை வழியே பாடுபட்டவர் டிவிஆர்., என மதுரை ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சீனிவாசன் புகழாரம் சூட்டினார். சிறப்பு விருந்தினராக மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ., கார்த்திகேயன் பங்கேற்று பேசுகையில், பத்திரிகை உலகின் சக்கரவர்த்தி டிவிஆர்., அவரது இளம் வயது படம் போல், தினமலர் இன்றும் இளமையாக இருக்கிறது, என புகழாரம் சூட்டினார். நிகழ்வில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. ஆடிட்டர் சேது மாதவா, ரோட்டரி உறுப்பினர் கன்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாரதி யுவகேந்திரா மற்றும் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

ஜூலை 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ