உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்

ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்

ஓடும் பஸ்சில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் | Karaikudi | Two Elderly Men Arrested | Woman Harassed on a Moving Bus. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயது 27, காரைக்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிறார். இரவு பணி முடிந்து டவுன் பஸ்சில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பெண் அமர்ந்திருந்த சீட்டுக்கு பின் சீட்டில் பயணித்த இருவர் அப்பெண்ணை செல்போனில் படம் பிடித்தனர். இதைக் கவனித்த அப்பெண் வாக்குவாதம் செய்தார். இதில் இருதரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் பஸ்சை பள்ளத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினார். போலீசாரிடம் பெண் புகார் கொடுத்தார். போலீசார் விசாரித்தனர். பெண்ணை செல்போனில் படம் பிடித்து தகராறு செய்த ராங்கியத்தை சேர்ந்த கிருஷ்ணன் வயது 54, அடைக்கப்பன் வயது 58 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை