உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / கொலையானவர் 'கடைசி விவசாயி' படத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் அத்தையாக நடித்தவர் | Usilampatti Crime

கொலையானவர் 'கடைசி விவசாயி' படத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் அத்தையாக நடித்தவர் | Usilampatti Crime

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரைச் சேர்ந்தவர் காசம்மாள் வயது 71. விவசாய கூலி தொழிலாளி. இவரது மூத்த மகன் நமகோடி வயது 52. மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தாயுடன் வசித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணிக்கு நமகோடி கண் விழித்தார். தூங்கி கொண்டிருந்த தாயை எழுப்பி வழக்கம் போல மது குடிக்க பணம் கேட்டுள்ளார். பணம் தர மறுத்ததால் கட்டையால் தாயின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த காசம்மாள் ஸ்பாட்டிலேயே பலியானார். நமகோடியை உசிலம்பட்டி போலீசார் கைது செய்தனர். மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற நல்லாண்டிக்கு தங்கையாகவும், நடிகர் விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் காசம்மாள் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ