உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / லாரியுடன் தமிழர் இருவர் சிறைப்பிடிப்பு

லாரியுடன் தமிழர் இருவர் சிறைப்பிடிப்பு

லாரியுடன் தமிழர் இருவர் சிறைப்பிடிப்பு | Usilampatti | Two people caught along with a lorry for dumping medical waste in Karumathur மதுரை மாவட்டம் கருமாத்தூரில் கடுக்காஞ்சி, பெத்தான்குளம் கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய் நீர் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயத்திற்கு நீராதாரமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. கண்மாய்கள் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் இரவில் மர்மநபர்கள் மருத்துவக்கழிவைக் கொண்டு வந்து கொட்டி தீ வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டனர். மருத்துவக்கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை அருகில் உள்ள நரசிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கழிவுகளை கொட்டுபவர்களை பிடிக்க கிராமத்து இளைஞர்கள் கண்மாயை சுற்றியுள்ள பகுதிகளை இரவு நேரத்தில் கண்காணித்து வந்தனர். நேற்று இரவு 1 மணியளவில் லோடு ஏற்றிய லாரி ஒன்று கடுக்காஞ்சி கண்மாய்க்குள் சென்றது. சுற்றி வளைத்த இளைஞர்கள் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அதில் லாரி உரிமையாளரும், டிரைவருமான மதுரை சுந்தரராஜபுரம் முத்துக்குமார் வயது 37 மற்றும் லோடுமேன் நடுமுதலைக்குளம் தமிழரசன் வயது 38 எவ தெரியவந்தது. இவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் உள்ள ஹாஸ்பிடலில் இருந்து மருத்துவக்கழிவுகளை அங்குள்ள இரும்பு கடையில் வைத்து சேகரித்து இங்கு கொண்டு வந்து கொட்டி தீ வைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருவரையும் லாரியுடன் சிறைபிடித்த கிராம மக்கள் செக்கானூரணி போலீசில் ஒப்படைத்தனர். எரிக்கப்பட்ட பகுதியில் பெரும்பாலும் கண்ணாடி குடுவைகள், மருத்துவ கழிவுகள் பாதி எரிந்த நிலையில் இருந்தன. செக்கானூரணி போலீசார் சுகாதாரத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பாலக்காட்டில் எந்தெந்த ஹாஸ்பிடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மருத்துவக்கழிவுகள் என்பதையும், கேரளாவில் உள்ள பழைய இரும்புக்கடை வியாபாரி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏப் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை