₹10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ | bribe | vao, oa arrested | melur | madurai
₹10,000 லஞ்சம் வாங்கி சிக்கிய விஏஓ / bribe / vao, oa arrested / melur / madurai மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் மலைச்செல்வம். இவர் தனது தந்தை ராமு பெயரில் உள்ள இடத்தை பட்டா மாறுதல் செய்ய கச்சிராயன்பட்டி விஏஓ துரைப்பாண்டியிடம் மனு கொடுத்தார். மனுவை பரிசீலனை செய்த விஏஓ பட்டா மாறுதலுக்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். 7000 தருவதாக ஒப்புக் கொள்வது போல் மலைச்செல்வம் நடித்தார். லஞ்ச விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறினார். போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய 7000 ரூபாயை விஏஓ துரைப்பாண்டியின் தனிப்பட்ட உதவியாளர் சுந்தர்ராஜபுரம் பாக்கியலட்சுமியிடம் மலைச்செல்வம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி சத்தியசீலன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்பாபு, பாரதி பிரியா உள்ளிட்டோர் துரைப்பாண்டி, பாக்கியலட்சுமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.