என்கவுண்ட்டர் பயத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம்
டிஸ்க்: ‛என்கவுண்ட்டர் பயத்தில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் / Varicchiur Selvam Press meet of Encounter Issue / Madurai மதுரை வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம், வயது 57. இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, விஷ ஊசி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடியாக மதுரையை வலம் வந்த செல்வம், நாளடைவில் ‛வரிச்சியூர் செல்வம் என அடைமொழியிட்டு தாதாவாக அழைக்கப்பட்டார். தங்க ஆபணரங்கள் மீது அளவு கடந்த ஆசை கொண்ட செல்வம் நடமாடும் நகைக்கடை போல் வலம் வருவதை வழக்கமாக கொண்டவர். ரவுடீஸம் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு மனம் திருந்தி கடந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக மனைவி, பேரன், பேத்தி என அமைதியாக வாழ்ந்து வருவதாக செல்வம் கூறி வருகிறார். மதுரை ரிங்ரோடு பாண்டிகோயில் அருகே மனைவியுடன் அமைதியாக வசித்து வரும் வரிச்சியூர் செல்வத்தின் காதுகளில் திராவகம் ஊற்றுவது போல் அதிர்ச்சியான செய்தி ஒன்று காட்டுத்தீ போல் பரவியது. அதாவது வரிச்சியூர் செல்வம் கோவையில் பதுங்கி கட்டப்பஞ்சாத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவரை கண்டதும் சுட்டுப்பிடிக்கும்படி கோவை போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இருந்து கோவை லோக்கள் போலீசாருக்கு உத்தரவு பறந்ததாக வெளியான செய்தி தான் அது. செய்தியை கேட்டதும் ஆடிப்போன வரிச்சியூர் செல்வம் உடனே செய்தியாளர்களை தனது வீட்டிற்கு வரவழைத்தார். கையோடு செய்தியாளர்கள் வருவது குறித்து கருப்பாயூரணி போலீசாருக்கும் தகவல் கூறினார். அண்ணே நான் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக வாழ்கிறேன். தினமும் உடல் பயிற்சி செய்கிறேன். சாப்பிட, துாங்க, சினிமா பார்க்க, டான்ஸ் ஆட என குடும்பத்துடன் அமைதியாக பொழுதை கழித்து வருகிறேன். என்னை என்கவுண்டர் செய்யப் போகுறீங்களா என கோவை போலீசாரிடமே கேட்டு விட்டேன். அதெல்லாம் ஒன்னுமில்ல வரிச்சி. சும்மா எவனாவது கிளப்பி விட்டுறுப்பான் என போலீசார் சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியாக இருக்கு என்றார் வரிச்சியூர் செல்வம். நான் இப்போ ஜாலியா இருக்கேன் என வரிச்சியூர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறினான். என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் கேளுங்க. பதில் சொல்கிறேன் என மனம் திறந்தார் வரிச்சியூர் செல்வம்.