அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஏபிவிபியினரை தடுத்த விசிக நிர்வாகிகள்
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த ஏபிவிபியினரை தடுத்த விசிக நிர்வாகிகள்| VCK parties opposed ABVP members who came to garland Ambedkars statue | Tallakulam | Madurai அம்பேத்கர் 135வது ஜெயந்தியை முன்னிட்டு மதுரை அவுட் போஸ்ட் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அகில பாரதிய வித்யார்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட் தலைமையில் பத்துக்கு மேற்பட்டோர் அம்பேக்தர் சிலைக்கு மாலை அணிவித்து பாரத் மாதா கீ ஜேய் என கோஷம் எழுப்பினர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விசிகவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கோஷம் எழுப்பியவர்களை நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவசர அவசரமாக வெளியே அனுப்பினர். தொடர்ந்து போலீசார் விசிக தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விசிகவினர் கலைந்து சென்றனர்.