உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / களிமண் பொம்மை தயாரிப்பு தொழிலாளா்கள் மகிழ்ச்சி | Geographical indication for Vilacherry Clay doll

களிமண் பொம்மை தயாரிப்பு தொழிலாளா்கள் மகிழ்ச்சி | Geographical indication for Vilacherry Clay doll

களிமண் பொம்மை தயாரிப்பு தொழிலாளா்கள் மகிழ்ச்சி / Geographical indication for Vilacherry Clay doll / Vilacheri / Madurai மதுரை விளாச்சேரியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் களிமண் பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா்கள். சீசனுக்கு ஏற்ப சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், 3 இஞ்ச் முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஆகியவற்றை செய்து வருகின்றனா். இந்த சிலைகளை களிமண், காகிதக் கூழ், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், சிமென்ட் ஆகியவற்றின் மூலம் தயாரிக்கின்றனர். இவை தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. இந்த களிமண் பொம்மைகள் உலகளவில் விற்பனை செய்ய புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த புவிசார் குறியீடு, அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களின் தனித்துவமான தன்மையை அங்கீகரித்து, பொருள் தரமானதாகவும், குறிப்பிட்ட பிராந்தியத்தின் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றி தயாரிக்கப்படுவதாகவும் சான்றளிக்கிறது. இதனால் பொருளின் சந்தை மதிப்பை உயர்த்துவதன் மூலம் உற்பத்தியாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த உதவுகிறது. குலாலர் கைவினை கலைஞர்கள் நலச்சங்க நிர்வாகிகள் சுந்தர், நாகராஜன், முருகன், விஜயகுமார், ஆறுமுகம் ஆகியோரின் முயற்சியின் பயனாக விளாச்சேரி களிமண் பொம்மைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. புவிசார் குறியீடு வழங்க 7 முறை ஆய்வு செய்த பின் கடந்த ஜூன் 21 ல் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு உதவிய நிர்வாகிகள், மதுரை நபார்டு வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையத்திற்கு களிமண் பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனா். புவிசார் குறியீடு மூலம் உலக அளவில் விளாச்சேரி களிமண் பொம்மைகளின் சிறப்பு, விற்பனை மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் என எதிர்பாா்க்கப்படுகிறது. மதுரையில் பல்வகை சிலைகள் தயாரிக்கும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அனைவரும் ஒரே இடத்தில் உற்பத்தி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் உள்நாட்டு விற்பனையாளர்கள், வெளிமாநிலத்தவர், வெளி நாட்டினர் நேரடியாக கொள்முதல் செய்ய விளாச்சேரி ஏற்ற இடமாக உள்ளது. இங்கு கைவினைக் கலைஞர் கிராமம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !