குவாரிக்கு எதிராக போர்க்கொடி | Usilampatti | Residents of Four Villages Protest
குவாரிக்கு எதிராக போர்க்கொடி | Usilampatti | Residents of Four Villages Protest | Protect Cultural Heritage Sites மதுரை மாவட்டம் பேரையூர் பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி சங்கரலிங்காபுரத்தில் ஓணான் கரடு குன்று உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு நீராதாரமாகவும், சிறு வன விலங்குகளின் வாழ்விடமாகவும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கல்குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து குன்றின் பாதியளவு கற்களை வெட்டி எடுத்து விட்டனர். குன்று முழுவதும் காணாமல் போகும் நிலை ஏற்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்காபுரம், டி.ராமநாதபுரம், செல்லாயிபுரம் ஆகிய நான்கு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். குவாரி அனுமதி ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஆந்திராவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு கனிமவளத்துறையினர் மீண்டும் அனுமதி வழங்கினர். குவாரி அனுமதியை ரத்து செய்யக்கோரி 4 கிராம மக்கள் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யாவிட்டால் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.