பஸ் ஸ்டாப்களை போஸ்டர் ஒட்டி போஸ்டர் ஸ்டாப்பாக மாற்றிய அறிவு ஜீவிகள்
பஸ் ஸ்டாப்களை போஸ்டர் ஒட்டி போஸ்டர் ஸ்டாப்பாக மாற்றிய அறிவு ஜீவிகள் /Viraganoor / Viraganoor Ring Road is being occupied by public மதுரை விரகனூர் ரிங்ரோடு அகலப்படுத்தப்பட்டு கடந்த 2015 ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மத்திய அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் பல லட்சம் செலவில் போடப்பட்டது. 10 வருடங்களிலேயே அதன் அழகை சீர்குலைக்கும் வகையில், பராமரிப்பின்றி இஷ்டத்துக்கு ஆக்கிரப்பு செய்யப்பட்டு வருகிறது. சினிமா, அரசியல் கூட்டங்கள், அரசியல் தலைவர்களின் பிறந்த நாள், இறந்த நாள், வீட்டு விசேஷங்கள், கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி இப்படி எதுக்கெடுத்தாலும் போஸ்டர் அடித்து ஒட்டுவது நம் மக்களிடையே அன்றாட நிகழ்வாகிவிட்டது. விரகனூர் பஸ் ஸ்டாப் விருதுநகர் முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணனால் 2018 ல் தொகுதி மேம்பாட்டு நிதியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அந்த பஸ் ஸ்டாப் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி ஒட்டி பஸ் ஸ்டாப்பை போஸ்டர் ஸ்டாப்பாக மாறியுள்ளனா். இது போன்ற போஸ்டர்களை சமூக ஆர்வலர்கள் தன்னெழுச்சியாக கிழித்து எறிந்தும் மீண்டும் மீண்டும் ஒட்டி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். பல லட்சத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு போடப்பட்ட திட்டங்களை சேதப்படுத்தி வருகின்றனா். ஆற்றுப்பாலம் வழி இணையும் ரிங்ரோடு சாலை வளைவில் உள்ள வைகை ஆற்று ஓரத்தில் குப்பைகளை கண்டமேனிக்கு வீசி செல்கின்றனா். மேலும், அங்குள்ள ரோட்டோர கடைகாரா்கள் குப்பைகளை ரோட்டில் குவித்து வைக்கின்றனர். ரிங்ரோடு குப்பை மேடாக மாறியதால், ஆற்றின் மண் தரம் கெடுவதோடு, நீர்மாசுபாடு, சுற்றுச்சூழலும் மாசுபாடு ஏற்படுகிறது. குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. அப்பகுதியில் பொதுக்கழிப்பறை இல்லாததால் சிலர் இந்த பகுதியையே கழிவறையாக மாற்றி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போடப்பட்ட ரிங் ரோடு நான்கு சக்கர வாகங்களின் ஸ்டாண்டாக மாறி வருகிறது. விரகனூர் பஸ் ஸ்டாப் முதல் தெப்பகுளம் செல்லும் சாலை நெடுக வரிசையாக வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு செல்கின்றனா். பல லட்சம் ரூபாய் செலவில் ரோடு போட்டும் பயனில்லை என அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புலம்பி செல்லுகின்றனர். பொதுமக்கள் இதனை கருத்தில் கொண்டு இனியாவது மதுரையின் அழகை கெடுக்காமல் பாதுகாக்க வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.