இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் அரசு பணி எதிர்பார்ப்பு
இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் அரசு பணி எதிர்பார்ப்பு | Request to provide government jobs | volunteers working | Home Search Education Program | Collector Office | Madurai தமிழகத்தில் கற்றல் இடைவெளியை சரி செய்ய கடந்த 2021 ம் ஆண்டு இல்லம் தேடிக்கல்வி திட்டம் துவங்கப்பட்டது. மதுரையில் இத்திட்டத்தின் கீழ் 600க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவிட் காலத்தில் இருந்து கல்வி பணிக்காக முழுமையாக பணியாற்றி வருகின்றனர். தற்போது ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் தங்களின் ஊதியத்தை உயர்த்தி, பணியை நிரந்தரமாக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அடையாள அட்டையுடன் அதிகாரப்பூர்வமாக பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தங்களின் கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்பிக்கை தெரிவித்தனர்.