தண்ணீர், உணவு கிடைக்காமல் தவிக்கும் வாயில்லா ஜீவன்கள் | Water Bodies Dried Up
தண்ணீர், உணவு கிடைக்காமல் தவிக்கும் வாயில்லா ஜீவன்கள் | Water Bodies Dried Up | Livestock Suffering due to lack of Water | Tamilnadu டைட்டில் வாய்ஸ்: சுற்றுச்சூழல் கடும் மாசடைந்து வருவதால் பருவ மழைகள் பொய்த்து வருகிறது. இதன் தாக்கம் நீர்நிலைகள் வறண்டன. தண்ணீர் கிடைக்காமல் வாயில்லா ஜீவன்கள் பரிதவிக்கும் பரிதாபம் ........ சுற்றுச்சூழல் கடும் மாசடைந்து விட்டது. கழிவு நீர், சாயப்பட்டறை கெமிக்கல் கழிவுகள் நேரடியாக நீர் நிலைகளில் நேரடியாகத் திருப்பி விடப்படுகிறது. கர்நாடக மாநில மருத்துவக் கழிவுகள், சாக்கடை கழிவு நீரை தமிழகம் வழியாக செல்லும் நீர் வழிப்பாதைகளில் விடுகின்றனர். இதனால் மாசடைந்த தண்ணீர் ரசாயன துர்நாற்றத்துடன் நுரை பொங்க வெளியேறி வருகிறது. இந்தத் தண்ணீரை துணி துவைக்க, கால்நடைகளின் தாகம் தீர்க்க பயன்படுத்த முடியாது. கருப்பு நிறத்தில் பாயும் மாசடைந்த தண்ணீரால் எந்தப் பயனும் இல்லை. சுற்றுச்சூழலுக்கு மனிதன் முடிந்தளவு கேடு விளைவித்து வருவதன் விளைவாக, பருவ மழைகள் காலமாற்றம் கண்டு வருகிறது. நீர் நிலைகள் வறண்டு சுட்டெரிக்கும் வெயில் கடுமையாக உள்ளது. அதன் ஒரு அவலமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோதிமாணிக்கம் பகுதியில் பெரிய கண்மாய் உள்ளது. இக்கண்மாய் தண்ணீர் மூலம் 15 கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய் வழியாக நீர் வரத்து உள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் வைகை அணை வறண்டு குட்டை போல் ஆனதால் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறக்க முடியவில்லை. இதனால் ஜோதிமாணிக்கம் பெரிய கண்மாய் வறண்டு விட்டது. வெயிலின் கொடுமையாலும், தீவனம் கிடைக்காமல் பறவைகள் பரிதவிக்கின்றன. கால்நடைகளின் நிலையம் பரிதாபமாக உள்ளது. நீர் நிலைகளில் ஆகாயத் தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. கழிவு நீர் சங்கமம் ஆன நீர் நிலைகளை துார்வாரி, கழிவு நீரை சுத்திகரித்து பிற பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மட்டுமே எதிர்கால சந்ததியினர் கரை சேருவர். இவை அனைத்தையும் அரசு மட்டுமே செய்ய வேண்டும் என நினைக்கக்கூடாது. ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்.