உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மகாத்மா காந்தி யோகா இன்ஸ்டிடியூட் ஏற்பாடு | Yoga, Meditation | Mahatma Gandhi Yoga Institute

மகாத்மா காந்தி யோகா இன்ஸ்டிடியூட் ஏற்பாடு | Yoga, Meditation | Mahatma Gandhi Yoga Institute

மகாத்மா காந்தி யோகா இன்ஸ்டிடியூட் ஏற்பாடு | Yoga, Meditation | Mahatma Gandhi Yoga Institute | Madurai மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்று அதிகாலை மகாத்மா காந்தி யோகா இன்ஸ்டிடியூட் சார்பில் யோகா, தியானம், பாராயணம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் குழந்தைகள், முதியோர் என ஏராளமானோர் மலை உச்சிக்கு நடந்து வந்தனர். மலையேறுவோருக்கு பருத்திப்பால், கடலை மிட்டாய் வழங்கப்பட்டது. மலை உச்சியில் அதிகாலை சூரியன் உதிக்கும் வேலையில் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி, பாராயணம் உள்ளிட்ட பயிற்சிகளை மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் இயக்குனர் கங்காதரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பாரதி கங்காதரன் அளித்தனர். ஒரு மணி நேர பயிற்சியை முடித்த பின் காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மலையடிவாரம் வந்தனர். ஞாயிறு விடுமுறையையொட்டி மலையேற்றம் மற்றும் யோகா, தியான பயிற்சி உடலுக்கும், உள்ளத்துக்கும் பயனுள்ளதாகவும், மனம் நிறைவு பெற்றதாக பயிற்சியில் ஈடுபட்டோர் கூறினர்.

ஜூன் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை