உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / 77 விவசாயிகள் கைது 77 farmers arrested

77 விவசாயிகள் கைது 77 farmers arrested

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்தாண்டு பயிர் காப்பீட்டு தொகை வழங்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்டிஓ ஆபீஸ் ரோட்டில் ஊர்வலம் சென்றனர். தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பு குழு தலைவர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டதால் சம்பா சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை முழுமையாக வழங்க வேண்டும். கடந்தாண்டு நிலுவையில் உள்ள காப்பீட்டு தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து ஆர்டிஓ ஆபீஸ் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 2 பெண்கள் உட்பட 77 விவசாயிகளை போலீசார் குண்டுகட்டாக துாக்கிச் சென்று கைது செய்தனர்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை