அரசுக்கு பாண்டியன் வலியுறுத்தல் | cm clarify mekadathu dam issue
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க, தமிழக அரசு கர்நாடகாவிடம் உரிய நீரை பெற்று தர வேண்டும், மேகதாது அணை கட்டுவதை சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பூம்புகாரில் இருந்து மேட்டூர் வரை விவசாயிகள் நீதி கேட்கும் பேரணி விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் தலைமையில் பூம்புகாரில் இன்று துவங்கியது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். பேரணியின் போது பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஜூன் 10, 2024