முகாம் அலுவலகம் - பஸ் ஸ்டாப் வரை 2 கி.மீ., நடந்து சென்ற கலெக்டர்
முகாம் அலுவலகம் - பஸ் ஸ்டாப் வரை 2 கி.மீ., நடந்து சென்ற கலெக்டர் | environmental pollution Collector travelling in a bus சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க மாதத்தில் ஒருநாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சைக்கிள், நடை பயணம் அல்லது அரசு பஸ்சில் கூட்டாக பயணிக்க அரசு அறிவுறுத்தியது. அதன்படி மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தனது வீட்டில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பஸ் ஸ்டாப் வரை நடந்து சென்றார். அதைத் தொடர்ந்து பஸ்சில் அலுவலகம் சென்றார். பஸ்சில் நின்று பயணம் செய்த அவர் பயணிகளிடம் குறைகளை கேட்டார். கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மற்றும் அதிகாரிகள் உடன் பயணித்தனர்.
பிப் 19, 2024