/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ விவசாயிகள் வலியுறுத்தல் | purchase sugarcane | Farmers demand govt
விவசாயிகள் வலியுறுத்தல் | purchase sugarcane | Farmers demand govt
மயிலாடுதுறை தாலுக்கா பட்டவர்த்தி, அச்சுதராயபுரம், குத்தாலம் தாலுகா வானாதிராஜபுரம், சேன்டிருப்பு, செருதியூர், சீர்காழி தாலுக்கா அல்லிவிளாகம், செம்பதனிருப்பு, ராதாநல்லூர், பள்ளக்கொல்லை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பாரம்பரியமாக பொங்கல் கரும்பு சாகுபடி செய்கின்றனர். சில ஆண்டுகளாக அரசு ரேஷன் கடை மூலம் பொங்கல் தொகுப்பை வழங்கி வருகிறது. அதில் செங்கரும்பையும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பொங்கல் தொகுப்பு குறித்தும், செங்கரும்பு கொள்முதல் குறித்தும் அரசு எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
ஜன 01, 2024