உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / அரியவகை ஆலிவ்ரெட் இன ஆமைகளை பதுகாக்க வனத்துறை நடவடிக்கை | Forest Department to save turtles

அரியவகை ஆலிவ்ரெட் இன ஆமைகளை பதுகாக்க வனத்துறை நடவடிக்கை | Forest Department to save turtles

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் முதல் கூழையார் கடற்கரை பகுதிகளில் டிசம்பர் முதல் மார்ச் வரை அரியவகை ஆலிவ்ரெட்லி வகை ஆமைகள் குழி தோண்டி 100 முதல் 150 முட்டைகள் வரை விட்டு மூடி சென்றுவிடும். ஆமை இனங்களை பாதுகாக்கும் வகையில் கூழையார், கொட்டாயமேடு, வானகிரி, மாணிக்கப்பங்கு உள்ளிட்ட ஆறு இடங்களில் வனத்துறையினர் சார்பில் முட்டை பொறிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடற்கரையில் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை சேகரித்து பொறிப்பகங்களில் வைத்து பாதுகாக்கின்றனர். குறிப்பிட்ட நாள் இடைவெளிக்கு பின் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளியே வந்தவுடன் அவைகள் பாதுகாப்பாக கடலில் விடப்படுகின்றன. இந்த முட்டை பொரிப்பகங்களில் 30,000 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். கொட்டாயமேடு மற்றும் கூழையார் உள்ளிட்ட பகுதிகளில் பொறிக்கப்பட்ட ஆயிரம் ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.

பிப் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை