தேசிய போட்டிக்கு தமிழக அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு
தேசிய போட்டிக்கு தமிழக அணிக்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு | Mayiladuthurai | Handball Tournament | Participation of 44 teams மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான 15 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான ஹேண்ட் பால் போட்டி இரவு பகல் ஆட்டமாக 2 நாட்கள் நடைபெறுகிறது. போட்டியில் 22 மாவட்டங்களை 44 அணிகள் பங்கேற்கின்றன. மயிலாடுதுறை மாவட்டம் கைப்பந்துக் கழக மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் போட்டிகள் நடக்கிறது. போட்டியை நிறுவனத்தலைவர் டாக்டர் ராம்கணேஷ்குமார், மாநில தலைவர் டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர். வெற்றி பெறும் அணியினருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளில் இருந்து தேசிய அளவில் நடைபெற இருக்கும் போட்டிக்கு தமிழக அணி வீரர்கள், வீராங்கணைகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.