உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை |heavy rain |Banana trees damaged

நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை |heavy rain |Banana trees damaged

நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை /heavy rain /Banana trees damaged மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, செம்மனார்கோயில், சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 300 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமாகியது. ஏக்கருக்கு ஒன்னரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்தோம். அறுவடைக்கு தயாராக இருந்த சமயம் சூறைக்காற்றால் வாழைகள் முறிந்தன. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு பகுதிகளை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை