உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / மயிலாடுதுறை யாருக்கு? காங்கிரசில் மோதல்: முழு பின்னணி | lok sabha election 2024 | mayiladuthurai

மயிலாடுதுறை யாருக்கு? காங்கிரசில் மோதல்: முழு பின்னணி | lok sabha election 2024 | mayiladuthurai

மயிலாடுதுறை லோக்சபா தொகுதில போன முறை திமுக களம் இறங்கி வெற்றியும் பெற்றுது. சிட்டிங் எம்பியா ராமலிங்கம் இருக்கிறாரு. ஒரு காலத்துல காங்கிரஸ் கோட்டையா இந்த தொகுதி இருந்துச்சு. எப்படியாவது இந்த முறை மயிலாடுதுறையில் களம் இறங்கிடனும்ணு காங்கிரஸ் ஆசைப்படுது. தங்களுக்கு தான் இந்த தொகுதிய ஒதுக்கனும்ணு திமுககிட்ட விடாம கேட்டுக்கிட்டு இருக்குது. தொகுதி ஒதுக்கீடு இதுவர கன்பார்ம் ஆகல. ஆனா மயிலாடுதுறைல நான் தான் நிப்பேனு இப்பவே காங்கிரஸ் கட்சிக்காரங்க அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இந்த முறை எனக்கு தான் சீட்டு வேணும்ணு ஆளாளுக்கு கட்சி தலைமைக்கு குடைச்சல் குடுத்துட்டு இருக்காங்க. மயிலாடுதுறை தொகுதில 4 முறை போட்டியிட்டவரு மாஜி மந்திரி மணிசங்கர் ஐயர். ஒரு முறை தோல்வி. 3 முறை ஜெயிச்சு இருக்காரு. மறுபடியும் போட்டிப்போட அவருக்கு ஆசை. அடிக்கடி தொகுதி பக்கம் விசிட் வர்றாரு. கட்சி விழாக்கள்லயும் அடிக்கடி பார்க்க முடியுது. அவரோட பெயர சில மேலிட பொறுப்பாளர்களும் கட்சி தலைமைக்கு பரிசீலனை பண்ணி இருக்காங்களாம். இப்ப மயிலாடுதுறை சிட்டிங் எம்எல்ஏவா இருக்க ராஜகுமாருக்கு சட்டசபைக்கு போய் அலுத்து விட்டது போல. அதனால லோக்சபாவுக்கு போக ஆசைபடுறாரு. தனக்கு தான் சீட் வேணும்ணு கட்சியிடம் கேட்டுக்கிட்டு இருக்காரு. இவங்களலாம் விட ஒரு படி மேல போய் வார் ரூமே ஓபன் பண்ணிட்டாரு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை ராஜேந்திரன். தனக்கு தான் சீட் வேணும்ணு முரண்டு பிடிச்சிட்டு இருக்காரு. இதுக்காகவே ஒரு பிரஸ் மீட்டும் வச்சாரு. அதுல, விவசாயி, வக்கீல்ணு எனக்கு பல முகம் உண்டு. வன்னியர், தலீத் என எல்லா சாதி மக்களும் எனக்கு ஓட்டுப்போடுவாங்க. வெற்றி எனக்கு தான்ணு அடிச்சி சொல்றாரு. அது மட்டும் இல்ல, தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத யாரையாது நிப்பாட்டுனா தடுத்து நிறுத்துவோம்ணு தடாலடியாக அறிவிச்சி இருக்காரு. உங்களுக்கே இந்த தொகுதி இல்லயேனு கேட்டா, நான் மயிலாடுதுறை மாப்பிள்ளைணு மழுப்புறாராம்.

மார் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை