/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ மாற்றுத்திறனாளியான விசிக பிரமுகருக்கு நேர்ந்த துயரம்| Mayiladuthurai Crime
மாற்றுத்திறனாளியான விசிக பிரமுகருக்கு நேர்ந்த துயரம்| Mayiladuthurai Crime
மயிலாடுதுறை மாவட்டம் நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் வயது 26. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் செயற்கை கால் பொருத்தப்பட்ட மாற்றுத்திறனாளி. புதன் இரவு பெட்ரோல் பங்க் சென்று விட்டு டூவீலரில் ராஜேஷ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மயிலாடுதுறை பிரதான சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர் ராஜேஷை வழிமறித்து நிறுத்தினார். தொடர்ந்து அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேைஷ தலை மற்றும் உடல் பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து தப்பினார்.
ஜூலை 04, 2024