உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / மறியலில் ஈடுபட்ட 118 பேர் கைது | Picket for removal of tar mixing factory

மறியலில் ஈடுபட்ட 118 பேர் கைது | Picket for removal of tar mixing factory

மயிலாடுதுறை மாவட்டம் எடமணல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தார் கலவை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து வெளியேறும் நச்சுப்புகை சுற்றுச்சூழலை மாசடைய செய்கிறது. சுற்று வட்டார கிராம மக்கள் மூச்சு விட முடியாமல் சிரமம் அடைகின்றனர். ஆலையை அகற்றக்கோரி பலகட்டப் போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. இதற்கிடையே தார் கலவை ஆலை 24 மணி நேரமும் முழு வீச்சில் செயல்பட துவங்கியது. இதையடுத்து ஆலையை அகற்றக்கோரி கிராமத் தலைவர் ஜெயராமன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 118 பேரை போலீசார் கைது செய்தனர். மறியலால் சீர்காழி- - திருமுல்லைவாசல் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆலையை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

மார் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை