₹42 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி | Shri Chandrashekara Trust
₹42 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன நடமாடும் ரத்த சேமிப்பு வங்கி | Shri Chandrashekara Trust | Mobile Blood Bank | Mayiladuthurai சென்னை ஸ்ரீ சந்திரசேகரா டிரஸ்ட் சார்பில் மயிலாடுதுறை அரசு ஹாஸ்பிடலுக்கு நடமாடும் ரத்த சேகரிப்பு வங்கி வாகனம் வழங்கப்பட்டது இதை டிரஸ்டி ஆடிட்டர் சந்தான கிருஷ்ணன் வழங்கினார். ஸ்ரீ சந்திரசேகரா டிரஸ்ட் சார்பில் மருத்துவம் கல்வி ஆன்மீகம் உள்ளிட்ட பல நலத்திட்ட பணிகளை ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன் செய்து வருகிறார். டிரஸ்ட் சார்பில் பிகேஎஃப் மற்றும் ஆர்கியான் கெமிக்கல்ஸ் இணைந்து 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதியுடன் நடமாடும் ரத்த சேகரிப்பு வங்கி வாகனத்தை ஹாஸ்பிடலுக்கு வழங்கினர் இதன் ஆவணங்கள் மற்றும் சாவியை டி ஆர் ஓ உமா மகேஸ்வரியிடம் டிரஸ்ட் நிறுவனர் ஆடிட்டர் சந்தான கிருஷ்ணன் ஒப்படைத்தார் இந்த ஆவணங்கள் மயிலாடுதுறை அரசு ஹாஸ்பிடல் சி எம் ஓ டாக்டர் மருதவாணியிடம் ஒப்படைக்கப்பட்டது ஸ்ரீ சந்திரசேகரா டிரஸ்ட்டின் சமூக நல பணிகளை பலரும் பாராட்டினர்