/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | temple festival | mayiladudurai
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | temple festival | mayiladudurai
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / temple festival / mayiladudurai மயிலாடுதுறை மாவட்டம் திருநாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வண்புருஷோத்தமன் கோயில் உள்ளது. திருநங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் பெற்ற இந்த கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 25 ம் தேதி விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து தாயாருடன் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கிராம மக்கள் திருக்கல்யாண சீர்வரிசை சமர்ப்பித்தனர். திருமண மொய்யழுதி திருக்கல்யாணத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மார் 28, 2025