உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாகப்பட்டினம் / காரைக்கால் மீனவர்கள் மீது குற்றச்சாட்டு

காரைக்கால் மீனவர்கள் மீது குற்றச்சாட்டு

நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த மீனவர்கள், 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தோப்புத்துறை அருகே 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே சென்ற காரைக்காலைச் சேர்ந்த அதிவேக என்ஜின் கொண்ட விசைப்படகுகள், செருதூர் மீனவர்களின் வலைகளை கிழித்து நாசப்படுத்தியுள்ளது. செருதூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்,முருகபாண்டி, ஐயப்பன், சித்திரவேல், ராஜசேகர்,ரமேஷ், தர்மன் ஆகியோரின் 20க்கும் மேற்பட்டோரின் வலைகள் கிழிக்கப்பட்டதால், செருதூர் மீனவர்கள் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள வலைகளை பறிகொடுத்து விட்டு இன்று வேதனையுடன் கரை திரும்பினர். செருதூர் மீனவர்களின் வலைகளை காரைக்காலை சேர்ந்த விசைப்படகுகள் கிழித்து நாசப்படுத்திதால் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துமீறலில் ஈடுபட்ட காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட செருதூர் மீனவர்கள் நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பிப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி