/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  நாகப்பட்டினம் 
                            / 450 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | State level Kabaddi league | Nagapattinam                                        
                                     450 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு | State level Kabaddi league | Nagapattinam
நாகப்பட்டினத்தில் சப் ஜூனியர் ஆண்களுக்கான மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டி விமர்சையாக தொடங்கியது. 38 மாவட்டங்களை சேர்ந்த 456 வீரர்கள் போட்டியில் மோதுகின்றனர். 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டி மூன்று நாட்கள் நடைபெறும். தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில செயலாளர் சபிபுல்லா மற்றும் நாகை டி எஸ் பி ராமச்சந்திர மூர்த்தி போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெறும் அணி பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய கபடி போட்டியில் பங்கேற்பர். ஏற்பாடுகளை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் செய்தனர் போட்டி விறுவிறுப்பாக நடக்கிறது.
 டிச 28, 2024