/ மாவட்ட செய்திகள்
/ நாகப்பட்டினம்
/ 7 கிமீ ஓடிய மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்| Plastic-free beach marathon
7 கிமீ ஓடிய மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள்| Plastic-free beach marathon
நாகையை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை மண்டலத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று நாகையில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏ, நாகை மாலி ஆகியோர் துவங்கி வைத்தனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர், ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 4 பிரிவுகளாக 7, கிலோமீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. வீரர்களை உற்சாகப்படுத்த மக்கள் கைதட்டி அவர்களை வரவேற்று ஊக்கப்படுத்தினார்.
பிப் 23, 2024