பஸ்சிலேயே மட்டையானவரை தட்டி தூக்கிய போலீசார் | Namakkal | Government bus theft | Drug addict Arrest
நாமக்கல் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் இருந்து எடப்பாடி செல்லும் பஸ் இரவு 8.30 மணியளவில் திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றது. சாப்பிடுவதற்காக டிரைவர் பச்சைமுத்து பஸ்சை நிறுத்தி விட்டு சென்றார். பஸ்சில் பயணிகள் யாரும் இல்லை. டிரைவர் பச்சைமுத்து சாப்பிட்டு விட்டு திரும்பி வந்து பார்த்த போது பஸ்சை காணவில்லை. கிளை மேனேஜர் சிவக்குமார் தகவல் தெரிவித்தார். மேனேஜர் சிவக்குமார் திருச்செங்கோடு போலீசில் புகார் கூறினார். சங்ககிரி அருகேயுள்ள தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு அருகில் பஸ் நிற்பதை போலீசார் கண்டுபிடித்தனர். போலீசார் பஸ்சில் ஏறி பார்த்த போது போதையில் ஒருவர் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். போதை ஆசாமியை அரசு ஆஸ்பிடலில் சிகிச்சை அளித்து விசாரித்தனர். விசாரணையில் ஊத்தங்கரையை சேர்ந்த சண்முகம் என்பதும் திருச்செங்கோட்டிற்கு ரிக் வேலை கேட்டு வந்து திரும்பு போது போதையில் பஸ்சை எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டார். போலீசார் பஸ்சை மீட்டு, சண்முகத்தை கைது செய்தனர்.