தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்|An old woman brutally killed | Namakkal
தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்/ An old woman brutally killed / Namakkal நாமக்கல் கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமியாத்தாள். வயது 67. கணவர் இறந்த நிலையில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். சாமியாத்தாளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் திருமணம் தனியாக வசிக்கின்றனர். சம்பவத்தன்று, தோட்ட வேலைகளை முடித்துவிட்டு, சாமியாத்தாள் வாசலில் கட்டிலில் படுத்து தூங்கினார். இரவு சுமார் 12:30 மணி அளவில், இரண்டு மர்ம நபர்கள் சாமியாத்தாளை தாக்கினர். முகம் மற்றும் வாய் பகுதியில் சரமாரியாக அறிவாளால் வெட்டினர். வலியில் துடித்த சாமியாத்தாள் கூச்சல் போட்டார். மர்ம நபர்கள் உடனே எஸ்கேப் ஆனார்கள். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, சாமியாத்தாள் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் துடித்தார். சாமியாத்தாள், ஊர் மக்களிடம் தன்னை இருவர் வெட்டிவிட்டு ஓடியதாக கூறினார். அதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள், சாமியாத்தாளின் மகள் கிருஷ்ணவேணிக்கு தகவல் தெரிவித்தனர். ஈரோடு தனியார் ஹாஸ்பிடலில் சாமியாத்தாளை அட்மிட் செய்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். Breath கொலை நடந்த இடத்தில், கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். டிஎஸ்பி சங்கீதா தலைமையில் நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது. சாமியாத்தாளின் குடும்பத்தினர், தோட்டத்தில் வேலை செய்யும் பணிப்பெண் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் , குற்றவாளியை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்ற நேரத்தில், அப்பகுதியில் இருந்த செல்போன் சிக்னல்களை போலீசார் ட்ராக் செய்தனர். Breath விசாரணையின் அடுத்த கட்டமாக, சாமியாத்தாளின் தோட்டத்தில் முன்பு வேலை செய்த நபர்கள் குறித்து விசாரித்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன், சாமியாத்தாள் தோட்டத்தில் வேலை செய்தவர் ஆனந்தராஜ், வயது 35 மற்றும் இவரது நண்பர் அஜித்குமார். வயது 36. இருவரும் கரூர் குளித்தலையில் தலைமறைவாகி இருப்பது உறுதியானது. சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் கொலையாளிகள் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியானது. Breath ஆனந்தராஜ் மற்றும் அஜித்குமார், தோட்டத்து வேலையில் சாமியாத்தாளுக்கு ஒத்தாசையாக இருந்துள்ளனர். கடைசியாக, சென்ற ஆண்டு தீபாவளியன்று இருவரும் தோட்டத்து வேலை செய்தனர். ஆனால் இவர்களது நடத்தை பிடிக்காததால், சாமியாத்தாள் இருவரையும் வேலையை விட்டு நீக்கினார். ஆனந்தராஜ் மற்றும் அஜித்குமார் இருவரும், சாமியாத்தாள் மகள் கிருஷ்ணவேணி நடத்திய எண்ணெய் மில்லிலும் வேலை செய்து வந்தனர். அங்கும் சரியாக வேலை செய்யாததால், கிருஷ்ணவேணியும் வேலையை விட்டு நீக்கினார். வேலை செய்தும் உரிய அங்கீகாரம் இல்லாமல் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த ஆனந்தராஜ் மற்றும் அஜித்குமார் ஆத்திரம் அடைந்தனர். சாமியாத்தாளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். Breath தோட்டத்து வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த சாமியாத்தாளை நோட்டமிட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர். சாமியாத்தாளிடமிருந்து நகை மற்றும் பணத்தை திருடும் நோக்கத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சாமியாத்தாள் அலறியதால், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் இருவரும் தப்பி ஓடியதாக போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். Breath தொடர்ந்து இருவரின் முகத்தை மூடி, கொலை நடந்த இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர் . கொலை சம்பவத்தை நடித்துக் காட்ட உத்தரவிட்டனர். இன்வெஸ்டிகேஷன் முடிந்தவுடன், முகமூடியுடனே, மீண்டும் இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். இதனால் கொதிப்படைந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், போலீசாரை முற்றுகையிட்டனர். எங்கள் தோட்டத்தில் வேலை செய்தவர்களின் முகத்தை எதற்காக மறைக்க வேண்டும்? என்றும், கொலையாளிகளை வெளியில் காட்டாமல் மூடி மறைப்பதற்கான காரணம் என்ன, என கொதிப்படைந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்திய போலீசார் அங்கிருந்து கிளம்பினர். Breath போலீசார் முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என சாமியாத்தாளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். நள்ளிரவில் நடந்த கொடூர தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி , பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனியாக இருக்கும் வயதானவர்களை குறி வைத்து நடக்கும் கொலை, கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.