ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் | Homeopathic doctor arrested
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் கொக்கராயன் பேட்டையை சேர்ந்தவர் மதிவாணன். இவர் ஹோமியோபதி டாக்டர். அப்பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வந்தார். இவர் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து குமாரபாளையம் அரசு ஆஸ்பிடல் டாக்டர் பாரதி, போதை மருந்து ஆய்வாளரிடம் புகார் கூறினார். இதையடுத்து போதை மருந்து ஆய்வாளர் மற்றும் மருத்துவ ஆய்வாளர் தலைமையிலான மருத்துவக்குழு மதிவாணன் கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். அங்கு ஊசி, அலோபதி மருந்து, மாத்திரைகள் இருந்தன. அவற்றை மதிவாணன் நோயாளிகளுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து மருந்து ஆய்வாளர் போலீசில் புகார் கூறினர். மதிவாணனை பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். கிளினிக்கில் இருந்த ஊசி, மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிளினிக் சீல் வைக்கப்பட்டது.