/ மாவட்ட செய்திகள்
/ நாமக்கல்
/ ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமித்து நேர்த்திகடன் |Rasipuram|Nithya Sumankali Mariamman Dimithi festival
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமித்து நேர்த்திகடன் |Rasipuram|Nithya Sumankali Mariamman Dimithi festival
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் கடந்த அக்டோபர் 22 ம் தேதி பூச்சாட்டுதல் திருவிழா தொடங்கியது. பூக்கூடைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பக்தர்கள் பூச்சாட்டினர். அக்டோபர் 24 ம் தேதி கோயில் முன்பு கம்பம் நடும் விழா நடைபெற்றது. அம்மனுக்கு 1,008 கிலோ பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தினமும் பல்வேறு அமைப்பினர் மூலம் சிறப்பு அலங்காரம், அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. நவம்பர் மாதம் 4ம் தேதி பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும், 5ம் தேதி கொடியேற்று விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது .
நவ 07, 2024