அருவங்காடு ஐயப்பன் கோவில் 51வது ஆண்டு பிரதிஷ்ட விழா Chariot Festival
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஐயப்பன் கோயிலின் 51 வது ஆண்டு பிரதிஷ்ட விழா பணவூர் பரமேஸ்வரர் நம்பூதிரி தலைமையில் துவங்கியது. விழாவையொட்டி கொடியேற்றம் மற்றும் கலச பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து செண்டை மேளம் முழங்க ஐயப்பன் சுவாமி திருவீதி உலா எழுந்தருளினார்.
பிப் 27, 2024