உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை |5,000 bananas leaning in the wind |Cuddalore

வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை |5,000 bananas leaning in the wind |Cuddalore

நீலகிரி மாவட்டம்கூடலூர், பந்தலூர், நடுவட்டம், தேவாலா, முதுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பெய்யும் மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. மண்வயல், பாடந்துறை, புளியம்பாறை, மங்குழி, ஏழுமுரம், தேவர்சோலை உள்ளிட்ட பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்பட்டுள்ளது. கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். விவசாயிகள் கூறுகையில், நேந்திரன் வாழைக்கு தற்போது தான் ஓரளவு விலை கிடைத்து வருகிறது. ஒரு மாதத்தில் அறுவடை செய்ய இருந்த நிலையில் மழையுடன் வீசிய காற்றில் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி நஷ்டத்தை ஈடு செய்ய அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

ஜூலை 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ