/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ ஹெத்தையம்மன் கோயிலுக்கு தடியுடன் ஊர்வலம்| Nilgiris| Hettaiamman Temple Festival
ஹெத்தையம்மன் கோயிலுக்கு தடியுடன் ஊர்வலம்| Nilgiris| Hettaiamman Temple Festival
நீலகிரி மாவட்டத்தில் 14 கிராமங்களில் படுக இன மக்களின் ஹெத்தையம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. ஜெகதாளவில் இருந்து ஹெத்தைக்காரர்கள் தாய் வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து செங்கோலுடன் சென்றனர். கோயிலி்ல் தயாரான பாரம்பரிய சேலை அம்மனுக்கு சாத்தப்பட்டது. மடியரை கோயிலில் இருந்து ஹெத்தையம்மன் கோயிலுக்கு அம்மனை பூசாரி தலையில் சுமந்து வந்தார். ரோட்டில் விரித்து வைத்த வேட்டிகள் மீது ஹெத்தைக்காரர்கள் நிற்க பக்தர்கள் தரையில் விழுந்து வழிபட்டனர். ஜெகதளா கோயில் அடைந்ததும் அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ஜன 01, 2024