துாக்கம் இழந்த மக்கள் | a wild elephant entered the town | pandalur
துாக்கம் இழந்த மக்கள் | a wild elephant entered the town | pandalur நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய நெலாக்கோட்டை விளங்கூர் குடியிருப்புகளை ஒட்டிய வனத்தில் கொம்பன் என அழைக்கப்படும் காட்டு யானை முகாமிட்டிருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கொம்பன் யானை நெலக்கோட்டை பஜார் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு புகுந்தது. மக்கள் துாக்கம் இழந்தனர். சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியது. சில மாதங்களாக யானை வனப்பகுதியில் இருந்ததால் மக்கள் நிம்மதியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஊருக்குள் புகுந்து தனது சேட்டையை துவங்கியது. வம்பு செய்த கொம்பனை துரத்த முயன்ற வனக்காவலர்கள் மற்றும் பொதுமக்களை ஆக்ரோஷத்துடன் துரத்தியதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த யானை நேற்று பகலில் குடியிருப்புகளை ஒட்டிய புதர் பகுதியில் ஹாயாக படுத்து உறங்கியது. இந்தப் பகுதியில் பிதர்காடு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.