சிவன்கோயில் அர்ச்சகர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய வகுப்பு தோழர்கள்
சிவன்கோயில் அர்ச்சகர் குடும்பத்திற்கு நிதி வழங்கிய வகுப்பு தோழர்கள் | Financial assistance to Archakar family | Pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணகுமார். இவர் கேரளா மாநிலம் வயநாடு சூரல்மலை சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை 30ம் தேதி அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து கல்யாண குமார் குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். அதில் பந்தலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்யாணகுமாருடன் படித்த சக நண்பர்கள் இணைந்து அவரது குடும்பத்திற்கு உதவ முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து நண்பர்கள் இணைந்து 50,000 ரூபாயை அர்ச்சகர் மனைவி மஞ்சுளாவிடம் வழங்கினர். இதில் போலீஸ் எஸ்ஐ திருகேஷ்வரன், மனோகரன், ரவி, அரசு ஊழியர் ராஜேந்திரன், உதயசூரியன், செல்வரத்தினம், பாரதராணி உள்ளிட்டோர் பல்கேற்றனர்.