கேரளாவில் ஆயுத விற்பனை ஜோர்? | Arms sale in Kerala
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் நக்சல் நடமாட்டம் மற்றும் வனவிலங்கு வேட்டை குறித்து போலீசார் தொடர் விசாரணை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடுகாணி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த இருவரை இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வரன், எஸ்ஐ கலையரசி ஆகியோர் பிடித்து விசாரித்தனர். அவர்கள் தேவாலா ஹட்டி பகுதியைச் சேர்ந்த மணி வயது 53 மற்றும் சசிகுமார் வயது 39 என தெரியவந்தது. அவர்கள் துப்பாக்கி தோட்டா வைத்திருந்தது தெரிய வந்தது.
பிப் 19, 2024